Friday, December 3, 2010

Vaaji Vaaji En Jeevan Sivaji Tamil Lyrics

Vaaji Vaaji En Jeevan Sivaji Tamil Lyrics

குழு: குகூ...குகூ...குகூ...குகூ...
ஆம்பல் ஆம்பல்
குகூ...குகூ...குகூ...குகூ...
மௌவல் மௌவல்
குகூ...குகூ...குகூ...குகூ...
ஆம்பல் ஆம்பல்
குகூ...குகூ...குகூ...குகூ...
மௌவல் மௌவல்


ஆண்: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்
உன் பூவிழி பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் காற்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனைகள் தவிடுபொடி.....

பெண்: வாஜி வாஜி வாஜி - என்
ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி -என்
ஜீவன் சிவாஜி
அன்பா...... வாளை எடு
அழகைச் சாணையிடு
உன் ஆண்வாசனை
என் மேனியில் நீ பூசிவிடு !!

ஆண்: அடி நெட்டை நிலவே........
ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு (வாஜி வாஜி...)
(இசை....)

பெண்: ஆ..... ஆ..... ஆ.....

ஆண்: ஆ..... ஒரு வெண்ணிலவை
மணக்கும் மன்மதன் நான்
என் தேனிலவே
ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை
இதோ இதோ இவள் தான்.......

பெண்: புன்னகைப் பேரரசே
தேன் குழைத்து
பூவுக்குள் குளிப்பீரா? ஆ... ஆ...
புன்னகைப் பேரரசே
தேன் குழைத்து
பூவுக்குள் குளிப்பீரா?
விடியும் வரை
மார்புக்குள் இருப்பீரா?
விழிகளுக்குள்
சிறுதுயில் கொய்வீரா? ஆ... ஆ...

ஆண்: ஓ... ஓ...
பெண்களிடம்
சொல்வது குறைவு
செய்வது அதிகம்
செயல் புயல் நானடி........ (வாஜி வாஜி...)
(இசை....)

ஆண்: பொன் வாக்கியமே
வாய் வாத்தியமே
உன் வளைவுகளில்
உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்துகொண்டேன்
சுகம் சுகம் கண்டேன்!

பெண்: ஆனந்த வெறியில் நான்
ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதி சொல்லி ஆடி
வெண்ணிலவைச் சகதியும் ஆக்கிவிட்டேன்

ஆண்: அடடடா
குமரியின் வனங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டைநீ (வாஜி வாஜி...)

No comments:

Post a Comment