Saturday, December 4, 2010

Kilimanjaro - Endhiran Tamil Lyrics

Kilimanjaro - Endhiran Tamil Lyrics

ஆண்: கிளிமஞ்சாரோ மாலை
 கனிமஞ்சாரோ கன்னக்
 குழிமஞ்சாரோ
 யாரோ... யாரோ...

குழு: ஆஹா... ஆஹா...
 ஆஹா... ஆஹா...

ஆண்: மொகஞ்சதாரோ... உன்னில்
 நொழஞ்சதாரோ.... பைய
 கொலஞ்சதாரோ
 யாரோ... யாரோ...

குழு: ஆஹா... ஆஹா...
 ஆஹா... ஆஹா...

பெண்: காட்டுவாசி காட்டுவாசி
 பச்சையாக கடியா
 முத்தத்தாலே வேக வச்சு
 சிங்கப்பல்லில் உரிய்யா

குழு: ஆஹா... ஆஹா...
 ஆஹா... ஆஹா...

பெண்: மலைப்பாம்பு போல வந்து
 மான்குட்டிய புடியா
 சுக்குமிளகு தட்டி என்ன
 சூப்பு வச்சுக் குடியா

குழு: ஆஹா... ஆஹா...
 ஆஹா... ஆஹா...

ஆண்: ஏவாளுக்கு
 தங்கச்சியே ஏங்கூடத்தான்
 இருக்கா...
 ஆளுயர ஆலிவ் பழம்
 அப்படியே எனக்கா?...

ஆண்: கக்கக்கோ
 அடி கின்னிக்கோழி
 அப்பப்போ
 என்ன பின்னிக்கோடி
 இப்பப்போ
 முத்தம் எண்ணிக்கோடி!

பெண்: ஏக்.. தோ.. எண்ணிக்கோ நீ...

ஆண்: கிளிமஞ்சாரோ மாலை
 கனிமஞ்சாரோ கன்னக்
 குழிமஞ்சாரோ
 யாரோ...
 மொகஞ்சதாரோ உன்னில்
 நொழஞ்சதாரோ பைய
 கொலஞ்சதாரோ யாரோ... யாரோ...

 (இசை...)

ஆண்: கொடி பச்சையே... எலுமிச்சையே...
 உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே...

பெண்: அட நூறு கோடி தசை ஒவ்வொன்றிலும்
 உந்தன் பேரே இசை!

ஆண்: இனிசக்கரே அடிசக்கரே
 மனசா ரெண்டா மடிச்சுக்கிறே

பெண்: நான் ஊற வைத்த கனி
 என்னை மெல்ல ஆற வைத்து கடி!

ஆண்: வேர்வரை நுழையும்
 வெயிலும் நான் - நீ
 இலைத்திரை ஏன் இட்டாய்?

பெண்: உதட்டையும் உதட்டையும்
 பூட்டிக் கொண்டு - ஒரு
 யுகம் முடித்து திற அன்பா!

ஆண்: கக்கக்கோ
 அடி கின்னிக்கோழி
 அப்பப்போ
 என்ன பின்னிக்கோடி
 இப்பப்போ
 முத்தம் எண்ணிக்கோடி!

பெண்: ஏக்.. தோ.. எண்ணிக்கோ நீ...

ஆண்: கிளிமஞ்சாரோ மாலை
 கனிமஞ்சாரோ கன்னக்
 குழிமஞ்சாரோ
 யாரோ... யாரோ...

குழு: ஆஹா... ஆஹா...
 ஆஹா... ஆஹா...

ஆண்: மொகஞ்சதாரோ உன்னில்
 நொழஞ்சதாரோ பைய
 கொலஞ்சதாரோ யாரோ... யாரோ...
 (இசை...)

பெண்: சுனைவாசியே... சுகவாசியே...
 தோள்கருவி... எனை வாசியே...

ஆண்: தோல்குத்தாத பலா... - ரெக்கைகட்டி
 கால்கொண்டாடும் நிலா...
பெண்: மரத்தேகம் நான்... மரங்கொத்தி நீ...
 வன தேசம் நான்... அதில் வாசம் நீ...

ஆண்: ஏ நூறு கிராம்தான் இடை - உனக்கு இனி
 யாரு நான்தான் கொடை!

பெண்: ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி - என்னை
 மேய்ந்துவிடு மொத்தம்

ஆண்: பச்சை பசும்புல் நீயானால்
 புலி புல் தின்னுமே என்ன குத்தம்?

பெண்: கக்கக்கோ
 அடி கின்னிக்கோழி
 அப்பப்போ
 என்ன பின்னிக்கோடி
 இப்பப்போ
 முத்தம் எண்ணிக்கோடி!
 ஏக்.. தோ.. எண்ணிக்கோ நீ...

குழு: ஆஹா... ஆஹா...
 ஆஹா... ஆஹா...
 ஆஹா... ஆஹா...
 ஆஹா... ஆஹா...

ஆண்: கக்கக்கோ
 அடி கின்னிக்கோழி
 அப்பப்போ
 என்ன பின்னிக்கோடி
 இப்பப்போ
 முத்தம் எண்ணிக்கோடி!

பெண்: ஏக்.. தோ.. எண்ணிக்கோ நீ...

No comments:

Post a Comment