Thursday, December 9, 2010

Neeyum Naanum - Mynaa Tamil Lyrics

Neeyum Naanum - Mynaa Tamil Lyrics

ஆண்: நீயும் நானும் வானும் மண்ணும்
 நெனைச்சது நடக்கும் புள்ள
 வீசும் காத்தும் கூவும் குயிலும்
 நெனைச்சது கெடைக்கும் புள்ள

பெண்: நடந்தா... அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
 கெடைச்சா... கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்

ஆண்: ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல
 ஏழாயிரம் கதவுகள் நமக்கெனத் தொறக்கும் புள்ள
 பறவைகள்.. பறந்திட.. சொல்லித்தர.. தேவையில்ல..

பெண்: நீயும் நானும்

ஆண்: வானும் மண்ணும்

பெண்: நெனைச்சது நடக்குமய்யா

ஆண்: ஏ... வீசும் காத்தும்

பெண்: கூவும் குயிலும்

ஆண்: நெனைச்சது கெடைக்கும் புள்ள

 (இசை...)

ஆண்: நாம நெனைச்சது நடந்துச்சு நல்லபடி
 அந்த சாமிக்கு என்ன சொல்லுவ

பெண்: நாம கேட்டதும் கெடைச்சிட்ட வாழ்க்கையத்தான்
 பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்

ஆண்: ஹே ஆச கொஞ்சம் வேணும்
 அது ஆயுள் நாளக்கூட்டும்
 அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல
 அத நெனைச்சாலே போதும் புள்ள

பெண்: நீயும் நானும்

ஆண்: வானும் மண்ணும்
 நெனைச்சது நடக்கும் புள்ள

பெண்: நீயும் நானும்

 (இசை...)

ஆண்: தெருக்கோடியில் கெடந்த வாழ்க்கையுந்தான்
 இப்ப கோடியில் பொரளுதடா

பெண்: இந்த பூமியக்கூட கையில் சுத்தும்
 அந்த ரகசியம் தெரிஞ்சதடா

ஆண்: ஹே ஹே காதல் தானே மாற்றம்
 நம்மை உயரத் தூக்கி மாட்டும்
 அட சொன்னா கேளு வாழ்க்கை சுத்தும் பூவு
 ஒன்னா கொண்டாடி போவோம் புள்ள

பெண்: நீயும் நானும் வானும் மண்ணும்
 நெனைச்சது நடந்திருச்சு

ஆண்: வீசும் காத்தும் கூவும் குயிலும்
 நெனைச்சது கெடைச்சிருச்சு
 ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல
 ஏழாயிரம் கதவுகள் நமக்கெனத் தொறக்குமே தடையும் இல்லை

பெண்: ஓ பறவைகள்.. பறந்திட.. சொல்லித்தர.. தேவையில்ல..
 நீயும் நானும் வானும் மண்ணும்
 நெனைச்சது நடக்குமய்யா...

No comments:

Post a Comment