Nee Oru Nimisham - Kunguma Poovum Konjum Puravum Tamil Lyrics
ஆண்: என் இராசாத்திக் கிளியே இராசாத்திக் கிளியே
நான்தான் நாளெல்லாம் தவமிருந்தேன்
நான் நம்பி கெடந்ததெல்லாம் நம்பலியோ மனசு
இப்போ வெம்பி வதங்குதடி வெறும் சறுகா போனதடி
தெம்பும் கொறைஞ்சதடி தெசையெல்லாம் மாறுதடி
(இசை...)
ஆண்: நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் என் தாலி
ஒத்திக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெறும் வேலி
(இசை...)
ஆண்: என் சின்னப் பசுங்கிலியே சித்திரமே இரத்தினமே
என்னத் தவிக்கவிட்டு எப்படிதான் வாழுவியோ
கண்ணங்கருப்புக்குள்ளே காணாம எனை தொலைச்சேன்
என்னதான் மீட்டுத்தர எந்த சாமி வரம் கொடுக்கும்
எந்த சாமி வரங்கொடுக்கும்
(இசை...)
ஆண்: நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் என் தாலி
ஒத்திக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெறும் வேலி
(இசை...)
ஆண்: என் சாதி சனம் தடுத்திருந்தா சத்தியமா கொன்னுருப்பேன்
மோதி சண்ட போட்டுப்புட்டு மூச்சடக்கிப் போயிருப்பேன்
பாவி மகளே நீ பாதியிலே கொன்னுப்புட்ட
ஆவி துடிக்குதடி அத்தனையும் அந்ததடி
அத்தனையும் அந்ததடி
(இசை...)
ஆண்: நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் என் தாலி
ஒத்திக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெறும் வேலி
No comments:
Post a Comment