Thursday, December 9, 2010

Kaiya Pudi - Mynaa Tamil Lyrics

Kaiya Pudi - Mynaa Tamil Lyrics

ஆண்: கையப்புடி கண்ணப்பாரு
 உள் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ!
 கொஞ்சம் சிரி எட்டு வைய்யி
 தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ!
 மெதுவா பாடு எதையாவது
 பனிப்போல் நீங்கும் சுமையானது
 இனிமேலே....
 மனசோடு உள்ளதப் பேசு என்னிடம் தீரும் பாரம்
 விலகாத அன்புடன் சேர்ந்திருக்கணும் நீயும் நானும்

பெண்: கையப்புடி கண்ணப்பாரு
 உள் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ!
 கொஞ்சம் சிரி எட்டு வைய்யி
 தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ!
 மெதுவா பாடு எதையாவது
 பனிப்போல் நீங்கும் சுமையானது
 இனிமேலே....

ஆண்: ஓ... உன்னையன்றி வேறு சுகம் எனக்கில்லையே
 உள்ளமெங்கும் நீயே வழித்துணை நன்மையே

பெண்: உன்ன நெனைக்கையில் பசி எடுக்கல
 நடு நிசியில விழி உறங்கல

ஆண்: விடியற வரை ஏதும் புடிக்கல
 விடுகதை இது விடை கிடைக்கல ஏனோ...

பெண்: அடை மழையிலும் குளிரெடுக்கல
 சுடும் வெயிலிலும் அனல் கொதிக்கல

ஆண்: மனம் மறந்திடும் வழித் தெரியல
 எதுவரை இது வரும் புரியல ஏனோ...

ஆண்: கடல சேரும் நதியானது
 உறவ சேரும் உயிரானது

பெண்: புவி மேலே.......

 (இசை...)

இருவர்: சுற்றும் உலகினில் என்ன அதிசயம்
 உன்னைவிட ஏதும் இல்ல ரகசியம்
 தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில்
 வண்ண நினைவுகள் வந்து உரசுது ஏனோ...

பெண்: எதுக்காக இப்படி கூறுகெட்டது மனசு மனசு

ஆண்: அநியாயம் பண்ணிட ஆசப்பட்டது வயசு வயசு

ஆண்: கையப்புடி...

பெண்: கையப்புடி...

No comments:

Post a Comment