Life A Jaali Than - Kutty Tamil Lyrics
ஆண்: ஹேய் ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து சௌத்து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்த்து பார்த்து வாழாத லைப்பே ஜாலிதான்
ஹேய் ஹாட்டு கோல்டு ஸ்வீட்டு சால்ட்டு
எதுவேனாலும் பாரு டேஸ்ட்டு
திட்டம் போட்டு வாழாத லைப்பே ஜாலிதான்
ஹேய் எக்சாமினேசன் அடிக்கடி ட்யூசன்
எல்லாமே போனால் ஜாலிதான்
திட்டாத டாடி தித்திக்கும் ஜோடி இருந்தா ஜாலிதான்
ஹேய் கைகளை ரெக்கையா மாத்து ஜாலிதான்
குழந்தையின் பாசை புரிஞ்சா ஜாலிதான்
அட ஜாலிதான்
குடை இருந்தாலும் நனைஞ்சா ஜாலிதான்
அடிக்கடி மனச தெறந்தா ஜாலிதான்
அட ஜாலிதான்
மனசுக்கு புடிச்சத ரசிச்சா ஜாலிதான்
(இசை...)
ஆண்: அரும்பாக மீசை வரும்போது
விரலாலே மெல்ல தொடும்போது
மனதோடு தோன்றும் சந்தோசம் ஜாலிதான்
மிளகாயப் போல பேசாம
மெதுவாக அன்பா நீ பேசு
கொலைகாரன்கூட குழந்தைன்னா ஜாலிதான்
கராத்தே குங்பூ தெரிகிறபோதும்
நண்பனிடம் தோத்தால் ஜாலிதான்
அலாரம் வைத்து விடியலில் எழுந்து தூங்கு ஜாலிதான்
ஹேய்.... தூரலில் ஜன்னலின் ஓரம் ஜாலிதான்
எமனிடம் ஜோக்கு அடித்தால் ஜாலிதான்
அட ஜாலிதான்
எரிமலையில் குளிர் காய்ந்தால் ஜாலிதான்
ஹேய் இளமையை முழுசாய் ரசிச்சா ஜாலிதான்
அட ஜாலிதான்
முதுமையை மனசில் மதிச்சா ஜாலிதான்
ஹேய் ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து சௌத்து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்த்து பார்த்து வாழாத லைப்பே ஜாலிதான்
(இசை...)
ஆண்: பல நூறு ஆண்டு முன்னால
உன் வீடும் தெருவும் உனதில்ல
புரிந்தாலே வாழ்க்கை எப்போதும் ஜாலிதான்
பல நூறுபேரை வென்றாலும்
அது வீரம் என்று ஆகாது
மனதார மன்னிக்கும் வீரம் ஜாலிதான்
பொறாமை கோபம் இல்லாம வாழ
உன்னால முடிஞ்சா ஜாலிதான்
எல்லோரும் போல வாழாமா புதுசா இருந்தா ஜாலிதான்
ஹேய்... இலட்சியம் ஆகிற கனவு ஜாலிதான்
ஜெயிக்கிற போது அழுகை ஜாலிதான்
அட ஜாலிதான்
தோல்வியைக் கண்டு சிரிச்சா ஜாலிதான்
டா டா டா
அடுத்தவன் தாகம் புரிஞ்சா ஜாலிதான்
அட ஜாலிதான்
அடிக்க வந்தவனை அணைச்சா ஜாலிதான்
No comments:
Post a Comment