Friday, December 3, 2010

Sahaana Saaral Sivaji tamil Lyric

Sivaji Tamil Lyric

ஆண்: சஹானா சாரல் தூவுதோ?
சஹாரா பூக்கள் பூத்ததோ?

(இசை....)

ஆண்: சஹானா சாரல் தூவுதோ?
சஹாரா பூக்கள் பூத்ததோ?

பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ?
சஹானா சாரல் தூவுதோ?

ஆண்: என் விண்வெளி
தலைக்கு மேல் திறந்ததோ?
அடடா.........!
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ?
அது என்னுடன் தேநீர் கொண்டதோ!

பெண்: கனவோ? நிஜமோ?
காதல் மந்திரமோ?

ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது..... (சஹானா சாரல்...)
(இசை....)

குழு: தீம்தனன.. தீம்தனன.... தினனனன.....
தீம்தனன.. தீம்தனன.... தினனனன.....
தீம்தனன.. தீம்தனன.... தினனனன.....
தீம்தனன.. தீம்தனன.... தினனனன.....

பெண்: தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன்... மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு.......

ஆண்: பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டும்மா?
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா......? ஹோ...
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது ஹோ...
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது....
ஓராயிரம் ஆண்டுகளாய் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது.... (சஹானா சாரல்...)

No comments:

Post a Comment